தோற்றம்

எதிர்ப்படும் நோக்கில்
சுமந்தேதிரிகிறேன் என் தோற்றத்தை!
சித்திரத்திற்கான விமர்சனங்களை
ஏனோ திரைச்சீலைகள் மீதே வீசுகின்றீர்கள்
ஓவியனை விட்டுவிட்டு!
என் சட்டையை
நானென எண்ணிக்கொண்டிருக்கும்வரை
நிர்வாணங்கள்...
உங்கள் கண்களுக்குபுலப்படப்போவதில்லை!
பலூன்களின் அலங்காரத்தில் மயங்கிக்கிடக்கிறீர்கள்!
காற்றின் இருப்பை மறந்துவிட்டு!
உடைகிறபோது
உணர்த்தப்படும்!
இங்கே நிரந்தரமானது...
பலூன்களல்ல...
காற்றுதான் என!