ஓலம்

அதீதத் தனிமையும்
மிகுந்த உற்சாகமும் கலந்த
அந்த சிருஷ்டி உலகத்திலிருந்து
தூக்கியெறியப்பட்டு அநேகநாட்களாகிவிட்டன
கையில் விளக்கோடும்
உள்ளம் நிறைய ஒளியோடும்
அவள் வந்தாள்
என் வானம் வெளிச்சமானது
கனிமரங்களும்
நிறைய காலடித்தடங்களும் கொண்ட
பரபரப்பான பாதைகள்
தினங்களை தின்றுகொண்டிருக்கின்றன
எங்காவது
சற்றே இளைப்பாறுகிற
நிசப்தவினாடிகளில் மட்டும்
பலவீனமாய் கேட்கிறது
என்னைத்தொலைத்துவிட்ட
என் கவிதைகளின் அழுகுரல்
வீரமணி இளங்கோவன்
நன்றி: http://www.keetru.com/literature/poems/veeramani_ilangovan.php
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home