தமிழன் இந்திகற்காதது சரியா?


தமிழன் இந்திபடிக்காதது சரியா?

அன்று தமிழக அரசியல்வாதிகளால் முடிவெடுக்கப்பட்டு,இன்றுவரை புறக்கணிக்கப்பட்டும் வருகிற இந்திமீது ஏன் இவ்வளவு வெறுப்பு?இந்திப்போராட்டம் என்றால் என்ன?

அதனால் இன்றைய தலைமுறை அடைந்தது நன்மையா?தீமையா?
இந்தி கற்காமல்விட்டதால் இழப்பா?இலாபமா?

அடிக்கடி எழும் இந்தக்கேள்விகளுக்கு,தமிழக அரசியல்சூழலில் ஆரோக்கியமான பதில் கிடைக்குமா?

இது சரியெனத்தீர்மானித்துவிடப்பட்ட முடிவுகளை அலசும் முயற்சி.

இந்தி எதிர்ப்புப்போராட்டம்:

இந்தி எதிர்ப்புப்போரட்டம் என்றால் என்ன? Anti-Hindi Impostion Agitation.
Hindi Imposition is nothing but Forcing Indian Government employees from TamilNadu to learn and work in Hindi (in non-Hindi areas) is Hindi imposition. Showing Hindi programmes all day in TamilNadu on Indian Government controlled television in spite of the expressed wishes of the people for more Tamil programmes is another example of Hindi imposition.

மேலும் பள்ளிகளில் வகுப்பு 6 முதல் 11 வரை இந்தியை கட்டாயமான மூன்றாவது பாடமாக ஆக்குவது.
அறிவிப்புப்பலகைகளில்,தமிழ் ,ஆங்கிலத்தோடு இந்தியையும் சேர்த்து எழுதுவது. இந்திய மற்றும் தமிழக அரசாணைகள் மேற்கூறிய மூன்றுமொழிகளிலும் அச்சிடுவது.

இந்திஎதிர்ப்பு போராட்டத்தின் ஆரம்பம்:

ஆங்கில ஆட்சியாளர்களின் கடைசிக்காலங்களில், இந்தியர்கள் தங்களுக்குள்ளாகவே பிராந்திய அரசுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதியளித்திருந்தனர்.காங்கிரஸ் சார்பில் சென்னை
மாகாணத்தை ஆண்ட சி.இராஜகோபாலச்சாரியார்(இராஜாஜி)இந்திமொழிக்கட்டாயத்தை கொண்டுவந்தார்.இதை எதிர்த்து 1938 ஜனவரி 3ந்தேதி இராஜாஜியின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுதான் முதன்முதலாய் நடைபெற்ற இந்திஎதிர்ப்புப்போராட்டம்.

அதேஆண்டில்,பெரியார்,அண்ணா,சோமசுந்தரபாரதிதிரு.வி.க,மறைமலைஅடிகள்,தருமாம்பாள் மற்றும் கே.வி.பி.விசுவநாதம் ஆகியோர் தலைமையில் அங்காங்கே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபின் இது விலக்கிக்கொள்ளப்பட்டது.இந்தியதேசம் சுதந்திரமடைவதற்கு முன்பாகவே,பலமுறை
இந்திக்கட்டாயப்பாடம் திணிக்கப்படுவதும்,பின் போராட்டங்களுக்குப்பின் விலக்கிக்கொள்வதுமாகவே
இருந்துவந்திருக்கிறது.

தாளமுத்து,நடராசன்

1939ஜனவரியில் இந்தி எதிர்ப்புக்காக கைதுசெய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் போலீசாரின் அடி,உதையால் சிறைச்சாலையிலேயே மரணமடைந்தனர்.இந்திஎதிர்ப்புப்போராட்டத்தில் முதன்முதலாய் தமிழகத்தில் சிந்திய இரத்தம் இவர்களுடையதுதான்.
நாடு சுதந்திரமடைந்தபின்,ஆட்சிப்பொறுப்பேற்ற காங்கிரஸ்,இந்திபேசாத மாநிலங்களில்,இந்தித்திணிப்பை
தீவிரப்படுத்தியது.திரும்பவும் மேற்கூறிய தலைவர்கள் சேர்ந்து,போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு பின்னரும்இந்தி தொடர்ந்தது.

ஜனவரி 26,1950- இந்திய அரசியலமைப்புச்சட்டம்
இந்தி அல்லாத பிறமாநிலத்தலைவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே தேசியமொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.
மேலும் ஜனவரி 26,1950 முதல் ஜனவரி 26,1965 வரை 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை-தேசிய மொழியாக இருக்குமெனவும்,அதன்பின் ஆங்கிலம் விலக்கப்பட்டு,இந்தி மட்டுமே முழுமையான தேசியமொழியாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டது.

1952ல் மத்திய அரசுஅலுவலகங்களில் இந்திஅறிவிப்புப்பலகைகளை கொண்டுவந்தது இந்திய அரசு.
பெரியார் தலைமையில் தி.கவும்,அண்ணா தலைமையில் தி.மு.கவும் இந்தி அறிவிப்புப்பலகைகளைத் தார்பூசிஅழிக்கும் போராட்டம் நடத்தினர். 1965ம் ஆண்டு வரை வருவதும் பின் போவதுமாக இருந்தன இந்தித்திணிப்பும் போராட்டங்களும்.

ஜனவரி 26,1965- கறுப்புதினம்
அறிவிக்கப்பட்ட 15ஆண்டுகள் முடிந்துவிட்டாயிற்று.குடியரசுதினத்தில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் படி 15ஆண்டுகளுக்குப்பின் இந்தி தேசியமொழியாக அரியணை ஏறியது.
இத்தினத்தை தி.மு.க கறுப்புதினமாக அறிவித்தது.தி.மு.க தலைவர்களும்,தொண்டர்களும் முதல்நாள் இரவே கைதுசெய்யப்பட்டனர்.

மாணவர் போரட்டம்:
ஜனவரி 26,விடுமுறைதினமாதலால்,25ந்தேதியே சென்னைப்பல்கலை மாணவர்கள் ஒருநாள் வகுப்புப்புறக்கணிப்புப்போராட்டம்
நடத்தினர்.அண்ணாமலைப்பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.இவர்களுக்கு ஆதரவளித்து கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகம் தன் வரலாற்றில்,இதுநாள்வரை சந்தித்திராத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தைச்சந்தித்தது.

சென்னையில் நடைபெற்ற பேரணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.எல்லாத்தமிழக நகரங்களிலும் பேரணிகள் அமைதியாய் நடைபெற்ற வேளையில், மதுரையில் வன்முறை தலைகாட்டத்துவங்கியது.
ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் மாணவர்சிலரை அரிவாளால் தாக்கினர்.அடுத்த இரண்டு வாரங்களும் தமிழக வரலாற்றில் அழிக்கமுடியாத கறுப்புநாட்கள். சுதந்திரப்போராட்டத்தை மிஞ்சும்வகையில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்த இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கனோர் உயிர்நீத்ததாக நம்பப்படுகிறது.மதுரைக்கலவரம் மற்றும் சிதம்பரம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டைக்கண்டித்து,தமிழகமெங்கும் போராட்டங்கள்
வெடித்தன.
அப்போதைய இந்தியப்பிரதமர் லால்பகதூர்சாஸ்திரியும்,உள்துறைஅமைச்சர் குல்சாரிலால் நந்தா மற்றும் தமிழகமுதல்வர் பக்தவச்சலமும் கூடிப்பேசி இப்பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதனெ முடிவெடுத்தனர்.

இராணுவமும்,துணைஇராணுவப்படைகளும் வந்திறங்கின.

தமிழகத்தின் ஒவ்வொருநகரமும் இரத்தம் சிந்தியது.கணக்கில்லாமல் போராட்டத்தினர் சுடப்பட்டார்கள்.

இறுதியாக,மத்திய அரசு பின்வாங்கியது.சட்டம் திரும்பப்பெறப்பட்டது.தமிழக அரசு,நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அத்தனை ஆதாரங்களையும் அழித்தது.இறந்தோர் எண்ணிக்கையும்,காயமடைந்தோர் எண்ணிக்கையும் இன்றுவரை தெளிவாய் அறியப்படவில்லை.

பொதுத்தேர்தல் 1967:
தமிழகமக்கள் தங்களது இந்திஎதிர்ப்பை காங்கிரஸ¤க்கெதிரான ஓட்டுக்களாக மாற்றினர்.இந்திப்போராட்டம் காங்கிரசின்
வீழ்ச்சியாகவும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் எழுச்சியாகவும் அமைந்தது.தி.மு.க முதன்முதலாய் ஆட்சிக்கட்டில் ஏறியது.

இதர இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட மும்மொழித்திட்டம்(அதாவது,ஆங்கிலம்,இந்தி,தாய்மொழி)ஏற்றுக்கொள்ளப்படாதெனவும்,
தமிழகம் இருமொழித்திட்டத்தை மட்டுமே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அன்றுமுதல் இன்றுவரை இந்தி அன்னியரின் மொழியாகவே அறியப்படுகிறது.

என் பார்வையில் ஒரு அலசல்:

இவ்வளவும் முடிந்தாயிற்று.உயிரைதந்து தமிழைக்காப்பாற்றியாயிற்று.
ஒருதலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை வந்தாயிற்று.என் அப்பா இந்திப்போராட்டத்தில் பங்கேற்றதாகக்கூறியிருக்கிறார்.
இந்தப்போராட்டத்தின் போது பிறந்தேயிருந்திராத எனக்குமாகச்சேர்த்து,
எடுக்கப்பட்டுவிட்ட முடிவுகள் என்னை எவ்விதம் பாதிக்கின்றன.
நான் அடைந்த இலாபம் யாது?

நான் சந்தித்த ஒருசில சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு:
சம்பவம் -1

நான் சிங்கப்பூரில் பணியிலிருந்த சமயம் அது.எங்கள் நிறுவனத்திற்கு இந்தியக்கிளையிலிருந்து ஒருவர் பயிற்சிக்காக வந்திருந்தார்
நானும்,சக சிங்கப்பூர்ஊழியர்(சீனர்) ஒருவரும் பணிநிமித்தமாக ஆங்கிலத்திலேயே அவருடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.
உடனிருந்த சீனர்,நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழியிலேயே உரையாடக்கூடாது?I dont mind என்றார்.ஆனால் வந்தவர் கன்னடர்.
அவர் இந்தியில் ஆரம்பிக்க நான் திருதிருவென விழித்தேன்.நாங்கள் இந்தியர்களாய் இருந்தபோதும்,எங்களிருவருக்குமான
பொதுவான மொழியொன்றுமில்லை என நான் சீனருக்கு உரைக்க,இன்றுவரை அவருக்கு காரணம் விளங்கவில்லை.
வந்த நண்பரோ,அங்கும் போட்டுஉடைத்தார்.Only tamilians dont know hindi என.

சம்பவம் -2
மிகச்சமீபமாய்,சீனத்தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தேன்.அங்கு பத்துநாட்கள் வேலை.பத்துநாட்களாய் இந்தியரெவரும் தட்டுப்படவில்லை.திரும்ப ஊர் வருவதற்காக விமானநிலையம் வந்தேன்.சிங்கப்பூர் வந்து ,அங்கிருந்து பெங்களூர் வருவதாக ஏற்பாடு.
செக்-இன் வரிசையில் நிற்கும்போது,கையில் கறுப்புநிற இந்தியப்பாஸ்போர்ட்டோடு ஒருநண்பர்.உடனே பேச ஆரம்பித்தோம்.
பத்துதினங்களுக்குப்பின் ஒருஇந்தியனை சந்தித்த மகிழ்ச்சியில் நான்.
என்ன ஆச்சரியம்?அடுத்தடுத்து மூன்று இந்தியர்கள் வந்து நின்றார்கள் அந்த வரிசையில்.எங்கள் உரையாடலில்
அவர்களும் பங்கேற்றார்கள்.சொந்த ஊர்,சீன வருகையின் நோக்கம்,சீனஉணவு மற்றும் இந்திய உணவுகிடைக்காமல்,நாக்குசெத்துப்போய்விட்டதாகவும் ஏதெதோ பேசிக்கொண்டிருந்தோம்.அருகிலிருந்த வேறொரு நாட்டுப்பயணி எங்கள் உரையாடலைக்கேட்டுக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த நண்பர்,சட்டென இந்திக்குத்தாவினார்.உடனே எல்லோரும் இந்தியில் பேசிச்சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
வெளிநாட்டில்,இந்தியர்களைச் சந்தித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலிருந்த நான்,சில நிமிடங்களிலேயே அங்கே இந்தியர்களுக்குள்ளாகவே
தனிமைப்படுத்தப்பட்டேன்.
அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலத்தவர்கள்.ஆனால் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருந்தது.ஆனால் நான்?
அக்கணத்தில் என்மனதில் நம் அரசியல்வாதிகள் வந்துபோனார்கள்.
சம்பவம் -3
தற்போது,பெங்களூரில் வேலைசெய்கிறேன்.எங்கள் நிறுவனமானது,இந்தியா முழுவதற்கும் விற்பனை,மற்றும் விற்பனைக்குப்பிந்திய சேவைகள் வழங்கும் நிறுவனம்.எங்களது வாடிக்கையாளர்களில்,End user என்று சொல்லக்கூடிய மெஷின் ஆபரேட்டர்கள்,ஆங்கிலம் முழுமையாக அறிந்திருக்கவேண்டுமென்ற அவசியமில்லாதவர்கள்.சில சிக்கலான தொழிற்நுட்ப விஷயங்களை ஆங்கிலத்தில் விளக்கும்போது
புரியாமல் தடுமாறக்கூடிய சூழ்நிலை அவர்களில் பலருக்குண்டு.
என்னோடு பணிபுரியும் அனைத்துமாநிலப்பொறியாளர்களும்,ஆங்கிலம் மற்றும் இந்தி என எளிதாக வாடிக்கையாளர்களை கையாண்டு
கொண்டிருக்க நான் மட்டும் முழுமையாய் ஆங்கிலத்தைக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.
இத்தாலி நாட்டைச்சேர்ந்த,என் முதலாளி உன் நாட்டின் தேசியமொழி உனக்கு எப்படித்தெரியாமல் போயிற்று என்கிறார்?

அவருக்கு நான் என்ன பதில் சொல்ல?
உங்களுக்குத்தெரிந்தால் சொல்லுங்கள்.

இப்போது என் முன் நிற்கும் கேள்விகள்:

1. இந்தியை ஏற்றுக்கொண்ட மற்றமாநிலங்களில் அவர்களின் தாய்மொழி அழிந்துவிட்டதா?

2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கெற்பட்ட இழப்பு என்ன?நமக்குக்கிடைத்த இலாபம் என்ன?

3. இந்தியாவை விட மிகப்பெரிய நாடு சீனா.அவர்களுக்கும் நம்மைப்போன்றே பிராந்திய மொழிகளுண்டு.
ஆனால் அவர்கள் எல்லோருக்குமான தேசிய மொழியாக மாண்டரினை ஏற்றுக்கொண்டார்கள்.எனவே அவர்களுக்கிடையே
வியாபாரரீதியாகவும்,வேலைவாய்ப்புக்களிலும் மிகுந்த ஒரு ஒற்றுமையைக்காணலாம்.அந்நாட்டின் வளர்ச்சிக்கு இதுவுமொரு
முக்கியக்காரணமல்லவா?

4. தாய்மொழிமட்டுமே படிப்பதாக ஜெர்மனியையும்,ஜப்பானையும்,சீனாவையும்,கொரியாவையும்துணைக்கழைக்கும் தமிழறிஞர்கள் அவர்களைனைவருக்கும் பிராந்தியமொழிகளிலிருப்பதையும்,தாங்கள் நாடுகளில் தேசியமொழியாக ஒரே மொழியை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும் செளர்கரியமாக மறந்துவிடுவது ஏன்?

5.ஆங்கிலமொழிப்புலமையால்,தமிழர்கள் உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கின்றனர்.நன்று.ஆனால்,இந்தியாவிற்குள்ளாக
நம்மால் பிரகாசிக்கமுடியவில்லையே ஏன்?.அப்படியும் ஜெயிக்கிற தமிழனை உற்றுப்பார்த்தால் அவனுக்கு இந்திதெரிந்திருப்பதை
அறியமுடிகிறதல்லவா?

6.வேண்டுமானால் கற்றுக்கொள்ளுங்கள் யார் தடுத்தது என்கிறவாதம் முட்டாள்தனமானது.வசதியும் வாய்ப்பும் இருப்பவன் கற்றுக்கொள்வான்.
கிராமப்புற மாணவன்?

7.இன்றைக்கு இந்திய அரசியலில்,மாநிலக்கட்சிகளின் ஆளுமையை சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.அப்படியிருக்க
இந்தியை பள்ளிகளில் அனுமதிப்பதால் தமிழ் அழிந்துபோகும்,இந்திக்காரர்களின் ஆளுமைக்கு ஆளாகநேரிடும் என்றெல்லாம் அச்சம்தேவையா?

8.நாற்பது வருடங்களாக இந்தியை மூன்றாம் மொழியாகக்கற்றுவரும் மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் தங்கள் தாய்மொழியை
மறந்தா விட்டார்கள்?

9.அதையெல்லாம் விடுங்கள்.தமிழகத்தின் பிரதிநிதியாய் டெல்லியில் குரல்கொடுக்கும் அ.தி.மு.க வின் எம்.பி.யான மைத்ரேயன்
தன் தமிழ்மொழிப்பேச்சை மொழிமாற்றம் செய்ய மொழிப்பெயர்ப்பாளர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார் சமீபத்தில்.இந்நிலை ஏன்?

10.டெல்லி அரசியலோடு மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள கலைஞர் தன் பேரன்களுக்கு மட்டும் இந்திடியுஷன் அனுமதித்ததுவிட்டு
சாதாரண கடைநிலைத்தமிழனுக்கு இந்தியை அனுமதிக்கமறுப்பது ஏன்?

உண்மை புரிந்து,ஏதாவது ஒரு கட்சி இந்தியை ஆதரித்தாலும் மற்றக்கட்சிகள் இதைப்பயன்படுத்தி தன்னை தனிமைப்படுத்திவிடுமே
என்கிற அச்சத்தில் எல்லாக்கட்சிகளும் தமிழ்ப்பற்றுச்சாயத்தை பூசித்திரிகின்றன.இதனால் காலங்காலமாய் தனிமைப்பட்டுக்கிடப்பதென்னவோ
கடைநிலைத்தமிழன் மட்டுமே.

இது என் பார்வை மட்டுமே.வெறும் மொழியுணர்ச்சியோடு இப்பிரச்சனையை அணுகாமல் நடுநிலையைச்சிந்திந்து உங்கள் கருத்துக்களையும் தயவிட்டு இங்கே பதியுங்கள்

நன்றி.
வீரமணி இளங்கோ

19 Comments:

Blogger ராஜ நடராஜன் said...

இந்திப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு பின்னூட்டமிட்டு போதும் போதும் என்றாகி விட்டது.அய்யா தருமி இருந்தா வாங்க,இல்லாட்டி அவரது பதிவுகளைத் தேடிக் கண்டு பிடியுங்கள்.நானெல்லாம் சேர்ந்துதான் இந்தியை வரவிடாம செஞ்சிட்டோமின்னு பயந்துட்டு இருந்தேன்.ஆனா நீங்க 1937ல இருந்து கணக்கு காண்பிக்கிறீங்க.நான் தப்பித்தேன்.சூழ்நிலைகளால் நானெல்லாம் இந்தி சினிமா பார்த்தே இந்தி கற்றுக் கொண்டவன்.சந்தர்ப்பங்கள் அமையும் போது எல்லாம் அமையுங்க.முதலில் தமிழை தனித் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாக மட்டும் பேச முயல்வோம்.இருக்குற இருப்பில இந்தியையும் முக்கியெடுத்து தமிழை ஒரு வழி பண்ணிடலாம்.

அப்புறம் தமிழகத்தில் வசிக்கும் மற்றும் பதிவினை வாசிக்கும் தமிழ் வழித்தோன்றல்களுக்கு ஒரு கேள்வி.அது எப்படி 15 அல்லது 20 வருட கால இடைவெளிக்குள் நம்ம நாக்கில் ல வும் ழ வும் நுழைய மாட்டேங்குது?

December 2, 2007 at 10:35 PM  

Blogger கோவி.கண்ணன் said...

இளங்கோ,

என்னை உங்களுக்கு தெரியும் தானே.
நிமலன் எப்படி இருக்கார் ?

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்மணத்தில் உங்களைப் பார்க்கிறேன்.

நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு பலரும் பலவகையில் பதில் சொல்லிவிட்டார்கள்.

எனது எண்ணங்களையும் இங்கே இணைப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.

சுட்டி 1
http://govikannan.blogspot.com/2007/11/blog-post_15.html

சுட்டி 2
http://govikannan.blogspot.com/2007/09/blog-post_7181.html

சுட்டி 3
http://govikannan.blogspot.com/2007/07/blog-post_18.html

சுட்டி 4
http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html

சுட்டி 5
http://bruno.penandscale.com/2006/01/importance-of-education.html

December 3, 2007 at 8:44 AM  

Blogger வீரமணிஇளங்கோ said...

இனிய நண்பர் திரு.கண்ணன் அவர்களுக்கு,
உங்களை எப்படி மறக்கமுடியும்?ஆனால் உங்கள் வலைப்பூ பெயரை மறந்துவிட்டேன்.
அதனால்தான்,தொடர்பு கொள்ளமுடியவில்லை.வலைப்பூ தொழிற்நுட்ப விஷயங்களுக்காக,உங்களை
மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள எண்ணி இருந்தேன்.நீங்களே மறுமொழி மூலம் தொடர்பு
கொண்டுவிட்டீர்கள்.நன்றி..நிமலன் ,நன்றாக இருக்கிறான்.உங்கள் வீட்டில் எல்லாரும் நலந்தானே?

இனி அடிக்கடி,வலைப்பூவில் சந்திப்போம்.

சில கருத்துகள் உங்கள் பார்வைக்கு.

1.இந்தி கற்காததால்,எனக்கு ஏற்பட்ட சிரமங்களை இங்கு பகிர்ந்துகொண்டேன்.

2.இந்திக்குப்பதிலாக,ஆங்கிலத்தைக்கொண்டாடினோம்.ஆங்கிலம் இப்போது தமிழை அழித்துக்
கொண்டிருக்கிறது-பா.ம.க இராமதாஸ்.

3.ஆனால் வெறும் தமிழில்மட்டுமே +2வரை கற்று,பொறியியல் கல்லூரிக்கு அரசுக்கோட்டாவில்
சேர்ந்த தேனி மாவட்டத்தைச்சேர்ந்த விது என்ற மாணவன் ,அனைத்துப்பாடங்களும் ஆங்கிலத்திலேயே உள்ள பொறியியல்கல்லூரியில் 5பாடங்களில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டான்.
தன்னுடைய கடிதத்தில் ஆங்கிலம் தனக்குப்புரியாததாலேயே தற்கொலை செய்வதாக எழுதிவைத்துள்ளான்.

4.இந்திவேண்டாம்,ஆங்கிலம் போதும் என்ற அரசியல்வாதிகள் ,அந்த ஆங்கிலத்தையாவது
பள்ளிகளில்ஒழுங்காக கற்றுக்கொடுக்க முயற்சிஎடுத்தார்களா?

5.கல்லூரிகளில் ஆங்கிலம் அவசியமென்பதை அறிந்த நடுத்தர,மேல்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளை
ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலக்கல்வியளிக்கிறார்கள்.இல்லாதவன்?

6.சரி.தமிழ்மட்டுமே போதும்.தாய்மொழியிலேயே படித்தால் எல்லாம்விளங்கும் எனக்கூறும்
தமிழறிஞர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்,கல்லூரிகளிலும் தமிழ்வழிக்கல்விக்கு இதுவரை எந்தநடவடிக்கையும்
எடுக்காதது ஏன்?

7.தமிழைக்காப்பாற்றுவதற்காகத்தான் இந்திவேண்டாமென்கிறோம் என்கிற பம்மாத்து இனித்தேவையில்லை.
40 ஆண்டுகளாக தமிழை இவர்கள் காப்பாற்றியதால் ஏற்பட்ட தமிழின் இலட்சணம்
சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.
இந்தியைப்புறக்கணித்து,ஆங்கிலத்தைமட்டும் வைத்து,நீங்கள் தமிழைக்காப்பாற்றியதன் பலன் தானா
தமிழில்படித்தவனின் தற்கொலை?

December 3, 2007 at 11:29 AM  

Anonymous Anonymous said...

ம்ம்.... எவ்வாறு ஆரம்பிப்பது என்று யோசிக்கின்றேன்...

நாம் வாழும் இந்திய தேசமானது பல மொழி (Multi-Lingual) மற்றும் பல கலாச்சாரங்களைக (Multi-Cultural) கொண்டது, இங்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட மொழியையோ குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ தினிக்க இயலாது... இந்தி மொழியை தினிப்பதென்பது நீங்கள் ஏதோ ஒரு கலாச்சாரத்தை தினிப்பதற்கு ஈடாகும். நீங்கள் என்னிடம் வந்து அஸ்ஸாமியரின் உடைகளை அணியச்சொல்வதற்க்கும் இதற்க்கும் நிறைய வித்தியாசமில்லை. அவர்களுடய மொழி மற்றும் கலாச்சாரம் அவர்களின் சூழ்நிலை மற்றும் பழக்கவழக்கங்களை பொருத்து அமையும் அதை வேறு இனத்தவரிடம் தினிப்பது முறையாகாது. தாங்கள் இந்தி மொழி அரியாத காரணத்தால் எழுந்த பிரச்சனை குறித்து கூறியிருந்தீர்கள் தமிழகத்தில் உள்ள பல கோடி மக்களில் எத்தனை பேர் இந்த பிரச்சனைகளை சந்தித்திருப்பர்...? ஒரு சதவிகிதம்? இந்த ஒரு சதவிகிதத்தினருக்காக மீதமுள்ள 99 சதவிகிதத்தினரிடம் இந்தியை தினித்தல் எந்த விதத்தில் நியாயம்?

எந்த ஒரு மொழியையும் கற்பது சுலபமல்ல மேழும் மனித மூலையும் கண்டவற்றையும் தேக்கிவைக்கும் குப்பைத்தொட்டியல்ல நமது நினைவற்றல் என்பது மிகப்பெரிய சொத்து... அதை எனக்கு தேவையில்ல எனத்தோன்றும் விஷையங்களுக்காக செலவிட வேண்டிய அவசியமில்லை மேலும் நான் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சென்றிருக்கையில் நான் மொழிப்பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது இந்த நாட்கள் என் வாழ்நாளில் மிகச்சிறிய முக்கியத்துவம் வாய்ந்து இதற்காக நான் அந்த நாட்டின் மொழிகளை கற்க ஆரம்பிப்பதென்பது முட்டாள்தனமாகும். என்னைப்பொருத்தவரை நன் ஜெர்மன் மொழி கற்பதற்க்கும் இந்தி கற்பதற்கும் நிறைய வித்தியாசமில்லை... சொல்லப்போனால் எனக்கு ஜெர்மன் கற்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நான் என் வாழ்நாளில் இந்தி மொழி மட்டும் பேச்க்கூடிய மக்களைவிட ஜெர்மன் மொழி மட்டும் பேசக்கூடிய மக்களை அதிகம் சந்திக்கிறேன். ஆக தங்களது தொழிலுக்கு இந்தி அவசியமென்றால் நீங்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்... உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை கற்றுக்கொள்ளச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்.

இப்போது தேசிய மொழி பற்றி பார்க்கலாம்... முதலில் ஒரு Multi Lingual society யில் தேசிய மொழி என்று ஒரு மொழியைக்கூறுவது முட்டாள்தனம். நாளை திமுக மத்தியில் ஆட்சி அமைத்தால் (சிரிக்காதீர் நமது ஊர் ஜனநாயகத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்)தமிழ் தேசியமொழி என்று அறிவிக்கப்படலாம் அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் தமிழைக் கற்க வேண்டுமென்பது வடிகட்டிய மடத்தனம். நீங்கள் தேசிய மொழி என்று ஒரு மொழியைக்கூறுவதைவிட இந்தியாவில் உள்ள 15 பெரும்பான்மை மொழிகளையும் தேசிய மொழிகள் என்று கூறலாம். நீங்கள் கேட்கலாம் 15 மொழிகளில் இரயில் நிலைய பெயர் பலகை அமைப்பது இயலாதென்று... மிகவும் சரி! சான்றிதழ்கள், அரசு ஆணை மற்றும் இதர கோப்புகளை நாம் ஆங்கிலம் மற்றும் 15 தேசிய மொழிகளுள் அந்த இடத்திற்க்கு பொருத்தமான மொழியையும் உபயோக்கலாம்.

சற்று பின்னோக்கிச்சென்று நமது வரலாற்றை பார்ப்போம்... இந்தியா என்ன தற்போதுள்ள எல்லை வரையறுக்கப்பட்ட நாடு எப்போது உருவானது? 1945ல் அல்லவா... அதற்க்குமுன் நாம் ஆங்கிலேயர் வரையறுத்த இந்தியாவிலிருந்தோம், அதற்க்கும் முன்பு நாம் சேர, சோழ, பாண்டிய நாடுகளாயிருந்தாம்... ஆக நாம் இன்று இந்தியா என கூறிக்கொள்ளும் இந்த பகுதி வெறும் 300 வருடங்களுக்கு முந்தியது... ஆனால் நமது மொழியும் கலாச்சாரமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது அதை நேற்றுவந்த யாரே ஏதே ஒரு அதிக பயனில்லாத காரணத்திற்காக மாற்றச்சொல்வது, வேறு ஒரு மொழியை கலாச்சாரத்தை கற்கச்சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

முடிவுரை:
என்னைப்பொருத்தவரை ஆங்கிலேயர் ஆட்சிக்கும் இன்று உள்ள ஆட்சிக்கும் நிறைய வித்தியாசமில்லை... ஆங்கிலேயர் ஆங்கிலம் என்ற மொழியை உபயோகித்தனர், மேற்க்த்திய காலச்சாரத்தை கொண்டிருந்தனர்; இன்று ஆட்சியிலிருப்பவர்கள், இந்தி எனும் மொழியை உபயோகிக்கின்றனர், வடக்கிந்திய கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். நாம் அன்று போல் இன்றும் அடிமைகளாகவே இருக்கிறோம்!

December 3, 2007 at 5:47 PM  

Blogger வீரமணிஇளங்கோ said...

திரு.கருப்பன்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.நீங்கள் சொல்வது போல்,நானும் இந்திதிணிப்பு என்பதை ஒத்துக்கொள்ளவில்லை.நமது ஊர் இரயில்நிலையத்தில் தமிழ்,ஆங்கிலத்தோடு இந்தியிலும் எழுதியிருப்பதை எந்தக்காரணத்திற்காக அனுமதிக்கிறோமோ அதேகாரணத்திற்காக விருப்பப்படுகிறவன் படிப்பதற்காவது
பள்ளிகளில் இங்கு குறைந்தபட்ச வசதிகள் செய்துகொடுக்கலாம்.
கட்டாயப்பாடமின்றி,விருப்பப்பாடமாக கொண்டுவரலாம்.

தமிழ்,ஆங்கிலத்தோடு இந்தியும் படிக்கவிருப்பம் எனக்கூறும் அரசுப்பள்ளி மாணவனுக்கு,நீங்கள் கூறும் பதில் என்ன?

ஒரு சதவீதம் என்று ஒதுக்கிவிடுதல் அவ்வளவு எளிதன்று.தான் பட்ட சிரமங்களை,இந்தியின்மையால்,
தான் இழந்தவற்றை எடுத்துச்சொன்னவர்கள்,ஒரு சதவீதம்.சொல்லாதவர்கள்?

என் அப்பா,கிராமத்து ஜவுளி வியாபாரி.ஈரோட்டில் துணியெடுத்து தேனிப்பகுதியிலுள்ள எங்கள்கிராமம்
வீரபாண்டியில் விற்பனை செய்வது வழக்கம்.ஈரோட்டில் கைத்தறி மட்டும் விலைக்குறைவு.
பாலியஸ்டர்,மற்றும் மில்துணிகள் மும்பையில் விலைமலிவு என்ற காரணத்தால் அங்குசென்று கொள்முதல் செய்ய எண்ணி 20வருடங்களுக்கு முன் மும்பை சென்றார்.ஒரே ஒருமுறை சென்ற அவர் தட்டுதடுமாறி,அங்குள்ள தமிழனிடம் சற்று பணத்தையும் இழந்து வீடுதிரும்பினார்.இந்தி மட்டும் தெரிந்திருந்தால்,என்
வியாபாரத்தை இன்னும் திறம்பட செய்யமுடியுமென கூறிய அவர் அதன்பின் மும்பை செல்லவுமில்லை.

என்னைப்போன்று,தன் பிரச்சினைகளை யாரிடமும் பகிர்ந்தகொள்ளவுமில்லை.இதுபோல் எத்தனை வியாபாரிகளை உங்களுக்கும்,எனக்கும் தெரியும்?
மேலே நீங்கள் குறிப்பிட்ட ஒரு சதவீதத்துக்குள் அவர்கள் வரமாட்டார்கள்.ஏனெனில்,தன் பிரச்னைகளை
வெளிப்படுத்தாமல்,தன் வியாபார எல்லைகளைச் சுருக்கிகொண்டுவாழ்ந்துவிட்டார்கள்.
ஏன் அவர் வேண்டுமானால்,இந்தி படித்துக்கொள்ளவேண்டியதுதானே எனலாம்.நாற்பத்தியைந்து வயதைக்கடந்து,தன் வியாபாரத்தால் தன் குடும்பத்தாருக்கு உணவும்,உடையும்,கல்வியும் தரவேண்டிய ,வேலைப்பளு மிகுந்த என் அப்பா இந்தி டியுஷன் சென்று,இந்தி கற்றுக்கொண்டு பின் மும்பை செல்வது
நடைமுறைக்குச்சாத்தியப்படுமா? என தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.

வேண்டுமானால்,மும்பைக்காரன் தமிழ்கற்றுக்கொண்டு இங்கு வந்து விற்கட்டுமே என்பீர்களேயானால்,
அது வாதத்திற்கு மட்டுமே சரிவரும்?

நான் கேட்பதெல்லாம் இந்தித்திணிப்பு அல்ல?
நாளை,என் அப்பாவைப்போல அல்லது வேறு ஒரு தொழில்நிமித்தமாக இந்தி அவசியம் தேவைப்படுகிற
இன்றைய மாணவனுக்கு,இலவசமாக இந்திக்கற்க ஏதேனுமொரு குறைந்தபட்ச வசதி வேண்டும்?அவ்வளவே.

அவன்,இந்தி கற்கவேண்டுமா?வேண்டாமா என்கிற முடிவை அவனோ,அவன் குடும்பத்தாரோ
எடுத்துக்கொள்ளட்டுமே?இந்தி அவனுக்குத்தேவையில்லை எனச்சொல்ல இந்த அரசியல்வாதிகள் யார்?

December 3, 2007 at 8:50 PM  

Blogger Laavanya said...

Hello anna, How are you doing? Great to see your blog (periappa sent an email with a link to this). Hope your wife and kid are doing fine.
I agree on your points and feel that it would be great to have 1 unified national language.

December 3, 2007 at 9:59 PM  

Blogger ROSAVASANTH said...

எந்த உலகத்தில் அய்யா இருக்கிறீர்கள்! சென்னையில் (இன்னும் கோயம்புத்தூரில், கரூரில், ஈரோட்டில்) பல இடங்களில் தமிழே பேச முடியவில்லை. ஆள் அண்டங்காக்கா கரியாக, தமிழ் அடையாளத்துடன் இல்லையென்றால் இந்தியில்தான் கதைக்கிறார்கள். சென்னையில் பல ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் இந்தி. என்னை மாதிரி மீசை இல்லாதவர்களை கண்டாலே ஹிந்திதான் அவர்களுக்கு வருகிறது. திரும்பிய இடமெல்லாம் இந்தி பேசப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து ஸெட்டில் ஆனா நாடார் கடையிலெல்லாம் ஹிந்தி பேசப்படுகிறது. இன்னும் பத்து பதிவுக்கு இதை பற்றியெல்லாம் எழுதலாம். இன்னமும் இந்தி படிக்காததால் அடைந்த 'நஷடத்தை' வைத்து அதே பல்லவியை பாடுகொண்டு... யோவ் மெண்டலாய்யா நீங்கள்ளா?!

இந்த பதிவில் என்ன கருமாந்தைரம் எழுதப் பட்டிருக்கிறது படிக்கவில்லை என்பதை என் மீதும் உங்கள் மிதும் உள்ள அசாத்திய நம்பிக்கையில் இங்கே குறிப்பிடுகிறேன்.

December 5, 2007 at 12:50 AM  

Anonymous Anonymous said...

//இந்தப்போராட்டத்தின் போது பிறந்தேயிருந்திராத எனக்குமாகச்சேர்த்து,
எடுக்கப்பட்டுவிட்ட முடிவுகள் என்னை எவ்விதம் பாதிக்கின்றன.
நான் அடைந்த இலாபம் யாது?//


இந்தக் கேள்வியைத்தாங்க நானும் கேட்டேன். எப்படீன்னா? நான் பிறந்தேயிராத பொழுதில் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து சதி செய்து, அவர்கள் அதிகாரம் வேண்டும் என்று பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து பிரிந்துவிட்டனர். இதனால் இன்று நான் ஒரு மூன்றாம் உலக நாட்டின் குடிமகனாக, வறுமையில் உழன்று, ஏதோ, கொஞ்சம் படித்து வெளிநாட்டில் வந்து இப்படி கம்ப்யூட்டரில் தட்டி பிச்சைக்கார வாழ்வு வாழ்கிறேன். இப்படிப்பட்ட சதி நடக்காமல் இருந்திருந்தால் நான் இன்னேரம் இங்கிலாந்து குடிமகனாக அமரவாழ்வு வாழ்ந்துகொண்டிருப்பேன்.

இப்படி எனக்கும் சேர்த்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தை இந்த அரசியல்வாதிகளுக்கு யார் கொடுத்தார்கள்?

இங்கிலாந்து குடிமகனாக இல்லாமல் போனதால் எனக்கே இவ்வளவு இழப்பென்றால் என்னை விட ஏழையாக இருக்கும் கோடிக்கணக்கானவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்!!

December 5, 2007 at 1:55 AM  

Blogger வீரமணிஇளங்கோ said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி!

ஒருவேளை உங்கள் எண்ணம் சரியாக இருக்கலாம்.
ஆனால் என்னுடைய கருத்துக்கள் எதையும் படிக்காமலும்,என் கேள்விகளுக்கு நேரிடையான எந்தப்பதிலும் அளிக்காமலும் ,வெறுமனே தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு,குதியாட்டம் போடுவது
நல்ல சிந்தனையாளனுக்கு அழகல்ல.

என் ஒவ்வொரு கேள்விக்கும்- சரியான பதிலைக்கூறுங்கள்.
இழப்புகள் உள்ளதா ,இல்லையா எனக்கூறுங்கள்.
அதைவிடுத்து,வெறும் கூச்சல் போடுவதில் எந்தப்பலனும் இல்லை.

உங்களைச்சொல்லிக்குற்றமில்லை.அறிவை மழுங்கடிக்கச்செய்வது உணர்ச்சி.
அவ்வாறான உணர்ச்சிச்தூண்டுதல்கள் இங்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளது.

இந்தி வேண்டும் என்பவர்களெல்லாமே தமிழைப்பற்றி அக்கறையில்லை இல்லாதவர்கள் என்பது போல
ஒரு சித்தரிப்பை உருவாக்கிவைத்திருக்கிறீர்கள்.பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்வழிகற்றவன் நான்.
யாப்பிலக்கணம் கற்று வெண்பாக்களும்,விருத்தக்கவிதைகள் செய்வதும் அறிவேன்.

நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்,உங்கள் எத்தனை பேரின் குழந்தைகள் இன்று தமிழ்வழிக்கல்வியில்
படிக்கிறார்கள்.தமிழ்நாட்டில் தமிழ் இல்லை எனக்குறைபட்டும் கொள்ளும் எத்தனை அரசியல்தலைவர்களின் பிள்ளைகள் தமிழ்வழியில் படிக்கிறார்கள்.

நடைமுறைப்பிரச்னைகள் என்று வரும்போது,தமக்கு சாதகமான முடிவுகளை எடுத்துக்கொள்வதும்,வாதத்திற்காகவும்,வீண்பேச்சுகளுக்காகவும் சூளுரைகள் விடுவதும் நமக்கு வாடிக்கைதானே.

December 5, 2007 at 11:51 AM  

Blogger புரட்சி தமிழன் said...

தமிழுடன் கூடுதாலாக உள்ள ஆங்கிலம் ஒருமொழியையே ஒழுங்காக படிக்க முடியாத மானவன் எப்படி மூன்றாவது மொழியை கற்றுத்தேர்வது இந்திய அளவில் நம்முடைய கல்வித்தரம் தான் நன்றாக இருக்கிறது காரனம் இரண்டே மொழிகள். இந்தி அனைவரும் தெறிந்திருந்தால் என்ன நடக்கும் ஒருவனும் சரியாக ஆங்கிலம் பேசமாட்டான் வட இந்தியர்களைப்போல பெயருடன் சாதி அடையாளங்களை கொண்டுள்ள வட இந்தியர்களோடு நீர் என்ன தான் இந்தி கறுக்கொண்டு போட்டி போட்டாலும் உனக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு மருக்கப்பட்டே இருக்கும் தமிழ்னாட்டிலும் இருக்கும் தனியார் வேலை வாய்ப்புகளும் வட இந்தியர் வசம் சென்றிருக்கும் இந்தி பேசுபவனுக்கு என்ன திறமை இருக்கிறது அடுத்தவனை ஏமாற்ற நினைப்பதை தவிற கடின உழைப்பை மருக்கும் வட இந்தியர்களால் என்ன பயன். மேலும் இன்று நக்சல் போன்ற தீவிரவாதிகள் இல்லாத மா நிலமாக தமிழ் நாடு இருப்பதற்க்கும் இந்தி இல்லாத்தே காரனம் இந்தி பேசும் மா நிலங்கல் எல்லாம் என்ன முன்னேறியது. நமது தமிழ் நாட்டில் ஒரு விவசாயிக்கு இருக்கும் அடிப்படை வசதி எந்த மானிலத்தில் உள்ள விவசாயிக்கும் இல்லை இந்தி சினிமா பார்த்திருக்கிறீர்களா 100% டைம் பாஸ் ஆகவே இருக்கும் இது எல்லாம் தேவையா நமக்கு மேலும் இந்தி தெறிந்திருந்தால் பாக்குபோட்டு துப்பி இருப்பார்கள் வேறு எதுவும் முன்னேற்றம் நடந்திருக்காது

December 5, 2007 at 2:02 PM  

Blogger புரட்சி தமிழன் said...

தமிழன் இந்திகற்க்காது லாபமே தவிர இழப்பு ஏதும் இல்லை வட இந்தியாவில் போய் சம்பாதித்து அதி பாதி உன் சாப்பாட்டுக்கே செலவழிக்கவேண்டும் அதுவும் உனக்கு சற்றும் பொருந்தாத உனவு வகைகள்

December 5, 2007 at 2:11 PM  

Blogger புரட்சி தமிழன் said...

கருப்பன் நீங்கள் சொல்வது 100% சரியானது

December 5, 2007 at 3:20 PM  

Blogger சீனு said...

//Only tamilians dont know hindi என.//
//இந்தியர்களைச் சந்தித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலிருந்த நான்,சில நிமிடங்களிலேயே அங்கே இந்தியர்களுக்குள்ளாகவே தனிமைப்படுத்தப்பட்டேன்.//

அதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? பெங்களூருவில் வேலைக்கு செர்ந்த புதிதில் நான் தமிழன் என்றதும் என்னிடம் இந்தி தெரியாது அல்லவா என்று கேலியெல்லாம் பேசியிருக்கிறார்கள். அதை நான் சட்டை செய்ததே இல்லை.

மற்றபடி இந்தி தெரியாததால் நட்டம் ஒன்றும் இல்லை. என்ன மற்ற மாநிலத்தவரை விட நமக்கு நடுவன் அரசு வேலைகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்தி இல்லாமலேயே, இந்தியாவில், இந்த அளவு முன்னேரியிருக்கிறோம் அல்லவா? இந்தி இருந்திருந்தால் இந்த முன்னேற்றம் இன்னும் அதிகரித்திருக்கும்.

நமக்கு இந்தி தெரியாததால் இங்கு வந்து குடியேறும் வட மாநிலத்தவர் (கர்நாடகா போன்ற மற்ற மாநிலத்தவருடன் ஒப்பிடுகையில்) குறைவு. அப்படியே வந்தாலும் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டு போகப்போகிறார்கள்.

December 6, 2007 at 1:08 AM  

Anonymous Anonymous said...

ஐயா புண்ணியவான்களே!

ஹிந்திக்காரன் இந்திய மொழிகளில் எந்த மொழியைக் கற்கவேண்டும்?

படிச்சவங்க சொல்லுங்கப்பா!!

புள்ளிராஜா

December 6, 2007 at 3:06 AM  

Blogger Unknown said...

கருப்பன், புரட்சித்தமிழன் மற்றும் சீனா அவர்களின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். இந்தி தெரியாவிட்டால், நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. தமிழர்களின் ஆங்கில அறிவு, நிறைய இந்தி பேசும் மக்களுக்குப் பொறாமை என்று சொன்னால், அது மிகையில்லை.

நானும், நீங்கள் குறிப்பிட்ட சில அசௌரியங்களை அனுபவித்து இருக்கிறேன். ஒருபோதும், அதற்காகக் கவலைப் பட்டதில்லை.

மாண்டரினுக்கும் மற்ற சீன பிராந்திய 'பேச்சு' மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதே சிங்கப்பூரில், நிறைய சீனர்கள் மாண்டரின் தெரியாதவர்களாக உள்ளனர். விசாரித்துப் பாருங்கள்.

தாய்மொழி என்பது உணர்வுப் பூர்வமானது. ஆங்கிலத்தால் தமிழ் மாசுபட்டு வருவது, தமிழர்களின் அடிமைத்தனத்தால் நடப்பது. எல்லா மொழியையும் கற்கவேண்டும். அதேசமயம், திணிப்பும் கூடாது. தாய்மொழி கண்டிப்பாகத்தேவை.

December 6, 2007 at 4:48 AM  

Blogger வீரமணிஇளங்கோ said...

புரட்சித்தமிழன்,சீனு,புள்ளிராஜா,கருப்பன் எல்லோருக்கும் நன்றிகள் பல.

//தாய்மொழி என்பது உணர்வுப் பூர்வமானது. ஆங்கிலத்தால் தமிழ் மாசுபட்டு வருவது, தமிழர்களின் அடிமைத்தனத்தால் நடப்பது. எல்லா மொழியையும் கற்கவேண்டும். அதேசமயம், திணிப்பும் கூடாது. தாய்மொழி கண்டிப்பாகத்தேவை//

தஞ்சாவூரான்,உங்கள் கருத்துகளோடு நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன்.
தமிழ் இங்கு அழிந்துகொண்டிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம்,தாய்மொழியில் ஒருவன் நிச்சயம் பரிச்சயமுள்ளவனாக
இருக்கவேண்டுமென்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
அதே சமயத்தில்,வேறு ஒரு மொழியைக்கற்றால் தாய்மொழி அழிந்துவிடுமென்பது சரியான கருத்தாக எனக்குப்படவில்லை.அம்மா ,அம்மா தான்.

December 6, 2007 at 9:28 AM  

Anonymous Anonymous said...

anbulla mamavirkku,
neengal kooriyiruppadhu migavum unmai. tamizhan enge sendralum pizhaithukkolvaan. Arivu, aatral, thiramai, solvanmai padaitha tamizhanukku ulla ore kurai- hindi karkadhadhu...
Varalaatruchuvadugalil tamizhaga arasu matrum tamil poraligal seidha porattam indru nanmaiai vida kedudhalai than adhigamaaga seidhurikkiradhu.
Mozhigalin arumaiai nan ariven... Kurippaga tamizhai pol oru azhagaana mozhi, ennai migavum kavarndha mozhiyin perumaiavum ariven.
Tamizh nattil ulla anaivarum tamizhai avasiyamaaga karkka vendum, indru chenna pol nagarangalil parthal tamizh ennavo oru anniya mozhiyagave agivittadhu.
immozhiyin perumaiai kaviyarasu vairamuthu pondra kavignargal mattum arindhal podhadu.. evvalavudhan kattralum, tamizh kattradhu kai man alave.... Tamizhai pol oru pazhamaiyaana mozhi ulagathil indru kidayaadhu. adhai kakka vendiyadhu ovvoru tamizhanin kadamaiaagum.
adhey pol nam dhesiya mozhiyaana hindiyai karpadhum ovvoru indiyanin kadamaiyagum...
adhil nanmai pala.... theemai kidayadhu....
Veera Tamizhargalagiya nam indru oru vidhi seivom..... ippadikku...
Ungal Anbu Mappillai
Magesh

May 23, 2008 at 3:37 PM  

Anonymous Anonymous said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

சென்னை விமான நிலைத்தில் தமிழர்களுக்கு அல்லாமல் இந்தி மட்டும் பேசுவோர்க்கு இடஒதுக்கீடு தரப்படுகிறது.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

June 11, 2008 at 2:49 PM  

Anonymous Anonymous said...

I went to north india to join central Govt. job and learned their language (my national language..!!!)with in 2 months.. Again after 12 years i got transferred to Chennai... and my north indian colleagues who worked here for the last 10 years doesnt know Tamil..!!

But just learning a language is beneficial. and we can learn.

Don't blame them. Because our north indian counterparts are having weak left brain...!!!
what to say...!!

May 17, 2009 at 6:40 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home