புரிந்துணர்காலம்

நிகழும் மங்களகரமான(இப்ப என்னா வருசம் நடக்குது),சரி விடுங்க,வர்ற ஜனவரி மாதம் 23ந்தேதி,எனக்குக்கல்யாணம்..

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்முறையான அழைப்பைப் பிறகு அனுப்புகிறேன்..

சிங்கப்பூரில், என் நண்பர்களில் பலபேர் அநேகமாக எல்லோருமே....
நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்து கல்யாணம் நடைபெறுவதற்குள்..

இடைப்பட்ட ஒரிருமாதங்களில்,
மேற்படி பெண்ணோடு கடலை போடபோனுக்காக செலவழித்த காசில்,இந்தியாவில் ஒருவீடே வாங்கியிருக்கலாம்.அந்தளவுக்கு போன்பில் கட்டுவார்கள்.

இரவானால் போதும்,அறைக்கதவைச்சாத்திக்கொண்டு...போனிலேயே தொங்கிக்கொண்டு கிடப்பார்கள் மணிக்கணக்கில்.

என்னய்யா பேசுறாய்ங்க இவ்வளவு நேரம்...என நாங்கள் கிண்டலடித்ததுண்டு.

இப்போது
அடியேனும் அந்த வேளையைஅணுவளவும் பிசகாது செய்து கொண்டிருக்கிறேன்.

போன் பில் வரும்போது தான் என்ன பேசினோம் ,இவ்வளவு நேரம் என யோசிக்கத்தோன்றுகிறது..

ஆனால்..

என்னுடைய ஒரு கவிதையில் சொன்னதைப்போல

"வருமானத்தில் பெரும்பாங்கை
நீ
வாரிக்கொண்டுபோனபோதும்
உன்மீது வருத்தமில்லை"

என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

என்னைப்போன்று புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு,

இந்த நிச்சயதார்த்தத்திற்கும்,திருமணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான்வருங்கால மனைவியைப் புரிந்துகொள்வதற்கான காலகட்டம்..

என்ன?அதற்கு நாங்கள் சற்று அதிகமான விலைகொடுக்கிறோம்.

பணம் திரும்பவும் வரும்..

திரும்பவும் வருமா?இந்தக்காலம்..

சிங்கை கவிஞர் இக்பால் ஒருமுறை என்னிடம் சொன்னார்.

காதலிக்கு இணை காதலிதான்..
அதே காதலி மனைவியானாலும்,,,
அந்தக்காதலியின் இடத்தை..இவளால் பூர்த்திசெய்யமுடியாதென்று.

சரிதானா நண்பர்களே?

வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்..

8 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

Wish you all the best!!!

December 11, 2004 at 4:22 AM  

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வாழ்த்துக்கள்

December 11, 2004 at 9:43 AM  

Blogger வீரமணிஇளங்கோ said...

லொள்ளு மூர்த்தி உங்களுக்கு.

மேற்படினா=மேலே குறிப்பிட்டுள்ள
அதாகப்பட்டது,நிச்சயிக்கப்பட்ட பொண்ணு.

எங்க பெரியப்பா பத்திர எழுத்தராக இருப்பதால்,
மேற்படி தாலுகா,மேற்படி கிராமத்தைச் சேர்ந்த மேற்படியாரது வாரிசான-இதுபோன்ற வாசகங்கள்,எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.

எனவே தான்,மேற்படி பதிவில்,மேற்படி வந்துவிட்டது.
மூர்த்தி,வரும் 13ந்தேதி மாலை,உட்லண்ட்ஸ் நூலகத்தில்,
திரு.மாலன் அவர்களின் நூல்வெளியீடு நடைபெறவுள்ளது.
நேரமிருந்தால் அவசியம் வரவும்.

இணைய மாநாட்டிற்கு வந்துள்ள அனைத்துப்பிரபலங்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வீரமணி இளங்கோ

December 11, 2004 at 9:21 PM  

Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

முன்கூட்டிய வாழ்த்துகள் வீரமணி இளங்கோ!

December 19, 2004 at 2:36 PM  

Blogger துளசி கோபால் said...

வாழ்த்துக்கள்! ஆமாம் கடலை வறுத்ததுதானே?

என்றும் அன்புடன்,
துளசி.

December 19, 2004 at 3:00 PM  

Blogger Balaji-Paari said...

intha pathivu super...Thalaippum athan porulum attagaassam...
ungallukku vaazhthukkal...

December 20, 2004 at 3:13 AM  

Blogger தங்ஸ் said...

வாழ்த்துக்கள்!

December 24, 2004 at 1:19 PM  

Blogger தங்ஸ் said...

வாழ்த்துக்கள்!

December 24, 2004 at 1:19 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home