பெங்களூரு மேன்சன்

என் கல்லூரிவிடுதியைப் போலல்லாது
அறையின் சுவர்களும் கதவுகளின் பின்புறங்களும்
வெறிச்சோடியே கிடக்கின்றன
எந்தவொரு நடிகையின் புகைப்படங்களுமற்று!

வட்டில் தாளங்கள்
சினிமா,கிரிக்கெட் அரட்டைகள்
சூழ அமர்ந்து கேட்கப்படும் ஊர்க்கதைகள்
ஏதுமின்றி...
அமைதியாய் உண்கிறார்கள்
சாப்ட்வேர் இளைஞர்கள்!

மணிக்கொருமுறை எச்சரித்துவிட்டுப்போகும்
எங்கள் வார்டனைப்போலொரு பிரகஸ்பதி
இங்கு எவரும் இல்லாதபோதும்
சத்தமின்றியே ஒலிக்கிறது டிவி அறை!

அருகிலிருப்பவன் எந்தமொழிக்காரனோவென்ற ஐயத்தில்
பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கின்றன ஆங்கிலச்சேனல்கள்.

அயர்ன் வண்டி,சூப்பர் மார்க்கெட்
பேருந்துநிறுத்தம்
ஏனைய பிற சந்திப்புகளின்போதும் கூட
புன்னகையுடனே விலகிவிடுகிறான்
என் மேன்சன்மேட்!

அலப்பறை விடும்
வாட்ச்மேனின் கெடுபிடிக்கு நடுவிலும்
சீட்டாட்டக்கும்பல்,செகண்ட்ஷோ கும்பலென
அமர்க்களப்படும் கல்லூரிவிடுதி!

எதுவும் பிடித்தமின்றி
தனியனாய் அமர்ந்து
லேப்டாப்பில் கவிதையெழுதும் என்னைப்போன்றே
அவரவரும் கிடக்கிறார்கள் அறைக்குள்ளேயே!

அழியா....மல் கிடக்கிறது கல்லூரிவிடுதி!


வீரமணி இளங்கோ

4 Comments:

Blogger மங்களூர் சிவா said...

jUper jUper!!

Vazthukkal.

December 6, 2007 at 12:14 PM  

Blogger மங்களூர் சிவா said...

அப்புறம் இன்னொன்னு வருதே அது என்ன சேனல்
Z TrendZ

December 6, 2007 at 12:16 PM  

Blogger மங்களூர் சிவா said...

//
பிற சந்திப்புகளின்போதும் கூட
புன்னகையுடனே விலகிவிடுகிறான்
என் மேன்சன்மேட்!
//
தெரியும்ல அவனுக்கு,
மச்சி நூறு ரூவா குடுறா அப்புறம் தரேன்போம்ல!!!!!!

December 6, 2007 at 12:18 PM  

Blogger வீரமணிஇளங்கோ said...

நன்றி மங்களூர் சிவா

December 6, 2007 at 2:31 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home