இலாபக்கணக்கு


Image hosted by Photobucket.com


தலைமை
கொதித்தது!

அறிக்கைகள் கோபப்பட்டன!

தளபதிகள் தொடைதட்டினார்கள்!

பகிரங்கமாய் சமரசம் பேசிய வல்லரசு
இரகசியமாய் பேரம்பேசியது
ஆயுதம் விற்க!

சினிமாக்காதலன்கள்
இராணுவ உடை அணிந்தார்கள்!

இறந்தவன் வீட்டுப்பரபரப்பை
பணமாக்கின
தொலைக்காட்சிகளும்
பத்திரிகைகளும்

நேரடியாய் ...
மறைமுகமாய் ...

எல்லோருக்கும்
ஏதோ ஒருவகையில்
செல்வம் அல்லது செல்வாக்கு
இலாபக்கணக்கில்

தகரப்பெட்டியோடு இராணுவத்திற்குச் சென்று
மரப்பெட்டிக்குள் படுத்துவந்தானே
என் கிராமத்து இளைஞன்
அவனைத்தவிர!