சிகரங்கள்

சறுக்கி விழுந்ததில்
என் எலும்புகள் முறிந்துபோனது
உங்களுக்குத்தெரியும்

தொடர்ந்த இயக்கங்களால்
என் தோள்கள் வலிமையானது
உங்களுக்குத் தெரியுமா?

பாறைகள் மோதியதில்
நான் மூர்ச்சையானதுதான்
உங்களுக்குத் தெரியும்

வேகத்துடிப்புகளில்
என் இதயம் பயிற்சியானது
உங்களுக்குத் தெரியுமா?

சிகரங்கள் தொடும்முயற்சியில்
நான் தோற்றுப்போனதென்னவோ
உண்மைதான்

ஆனால்
சில உயரங்கள்
நான் தொட்டுவந்ததை
நீங்கள் யாரும் மறுக்கமுடியாது

இன்று
நழுவவிட்ட சிகரத்தை
நான் தழுவிக்கொள்ளும் நாள்
வெகுதூரமில்லை

அதுவரையில்
என் விழுப்புண்களுக்கு
மருந்துபோடவேண்டாம் நண்பர்களே

முடியுமானால்
என் வாள்களை
சற்று தீட்டிக்கொடுத்துவிட்டுப்போங்கள்

வீரமணி இளங்கோவன்

3 Comments:

Blogger குழலி / Kuzhali said...

//முடியுமானால்
என் வாள்களை
சற்று தீட்டிக்கொடுத்துவிட்டுப்போங்கள்//

இல்லையென்றால்
என் வாள்களை
மழுக்காமல்
ஓரம் போங்கள்

இப்படியும் முடித்திருக்கலாம்....

July 3, 2005 at 9:13 PM  

Blogger சினேகிதி said...

நல்ல கவிதை

July 4, 2005 at 1:53 AM  

Blogger Unknown said...

கவிதை super.

April 23, 2008 at 8:49 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home