ஒரு சந்தோஷப்பகிர்வு
நண்பர்களே,
ஒரு மகிழ்வான செய்தியை, சக குடும்ப உறுப்பினர்களிடம்
பகிர்ந்துகொள்வதான மனப்பாங்கோடு உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.
சிங்கப்பூரின் நிரந்தரவாசத்தகுதி என்றழைக்கப்படும் Permanent Residentship
இன்று எனக்கு கிடைத்துள்ளது.
திருமணம் முடித்து,மனைவியை 3 மாத சுற்றுலா விசாவில் இங்கு அழைத்துவந்து
பிறகு,ஏர்போர்ட்டில் கண்ணீர் மல்க வழியனுப்பும் துர்பாக்கியத்திலிருந்து
ஒருவழியாக தப்பித்துவிட்டேன்.
இனி,வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்வதில்,எந்தச்சிக்கலும் இல்லையென்பதால்,
இத்தனை காலம் நான் பயந்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்த, என் தற்போதைய முதலாளிக்கு
சற்று மரியாதையைக் குறைத்துக்கொண்டு,லேசாக நெஞ்சை நிமிர்த்தித்திரியலாம்.
இப்படி,இன்னும் பல சலுகைகள் உள்ளன இந்த PR க்குள்.
வீரமணி இளங்கோ
8 Comments:
வாழ்த்துக்கள்.இளங்கோ
வாழ்த்துக்கள் வீரமணி இளங்கோ. எப்ப ட்ரீட்? :-)
வாழ்த்துகள் வீரமணி இளங்கோ
-மதி
வாழ்த்துக்கள் இளங்கோ!
//இனி,வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்வதில்,எந்தச்சிக்கலும் இல்லையென்பதால்,
இத்தனை காலம் நான் பயந்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்த, என் தற்போதைய முதலாளிக்கு
சற்று மரியாதையைக் குறைத்துக்கொண்டு,லேசாக நெஞ்சை நிமிர்த்தித்திரியலாம்.//
இதுதானே வேண்டாங்கறது! அப்ப இவ்வளவு நாள் காமிச்ச மரியாதை போலியாப் போச்சே!
யாரு கண்டா, இங்கெயே உயர் பதவி கூடக் கிடைக்கலாம். அதுனாலே கொஞ்சம் அடக்கியே/அடங்கியே
வாசிக்கறது!
என்றும் அன்புடன்,
துளசி.
வாழ்த்துக்கள் வீரமணி இளங்கோ.
அப்படியே துளசி சொன்னதையும் யோசிச்சுப்பாருங்க. சீக்கிரம் பதவி உயர்வும் கிடைக்கட்டும்.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கூறிய எல்லோருக்கும் நன்றிகள்.
துளசி,நிச்சயம் உங்க அறிவுரைப்படி நடப்பேன்.
ஒரு சந்தோஷத்தில் அப்படி எழுதினேன்.
மற்றபடி,என் தற்போதைய நிறுவனத்தில் மிக மகிழ்வோடுதான் இருக்கிறேன்.மாறும் எண்ணமேதுமில்லை.
வீரமணி இளங்கோ
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home