முன்னுரை மாதிரின்னு வச்சுக்கோங்களேன்

எல்லோருக்கும் வணக்கம்...

இந்த வலைப்பதிவுகள் விசயம் எனக்குப் புதுசு.
திசைகள் படிச்சிட்டு,நம்மளும் செய்வோம்னு வந்துட்டேன்.இங்க பார்த்த மக்கள் கலக்கிறாங்க.

சிங்கப்பூர் தமிழ்முரசில கவிதை எழுதறதோட சரி.திசைகள் திருமதி ரமாசங்கரன் அறிமுகம் செஞ்சாங்க. அப்புறம் நண்பன் நெப்போலியனும்,அண்ணன் பிச்சினிக்காடு இளங்கோவும் இணையத்தில் நிறையப்பத்திரிக்கை இருக்குப்பா..
தமிழ்முரசில கவிதைப்பக்கம் வந்ததும் டக்குனு பொறட்டிட்டு சினிமா பக்கத்துக்கு போய்டறவன் தான் அதிகம்.கவிதை படிக்கறவங்க கம்மி,இணையத்துல எழுதுனாங்க.

திசைகள்,திண்ணை,பதிவுகள்,தட்ஸ்தமிழ்னு எழுதிவுட்டேன்.என்னா ஆச்சரியம்.பிரசுரம் செஞ்சுட்டாங்க..குமுதத்துக்கும்,ஆனந்தவிகடன் உள்ளிட்ட ஏனைய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி,இந்த வாரம் போட்றுவாங்கையலா,அடுத்தவாரம் போடுவாங்கையலானு எந்தவாரத்திலும் போடாம நொந்துபோனவங்களுக்கு,இந்த இணைய இதழ்கள் வரப்பிரசாதம்.

அதையெல்லாம்விட... இந்தா, நான் என்னா நினைக்கிறனோ ,அதை எழுதமுடியுது பாருங்க,இந்த வலைப்பூக்கள்ல,இதுதாம்பா சூப்பரோ சூப்பர்.(இதைக்கண்டுபிடிச்சவனுக்கு மதுரையில் ஒரு செலை வைக்க நான் ஏற்பாடுபண்றேன்.)

ஆனா இந்த ஒருவாரமா ,வலைப்பூ ,தமிழ்மணம்,சுரதா இதையெல்லாம் துணையா வச்சுக்கிட்டு,நானும் ஒருவழியா எழுத ஆரம்பிச்சிட்டேன்.இந்த காசி,சுரதா ,அப்புறம் யாருப்பா,எல்லோருக்கும் நன்றி.நீங்க செய்றது தமிழுக்கு பெரியபணி.செம்மொழிக்கி யாருகாரணம்னு,மாலை மரியாதைக்கு,அடிச்சுக்கிட்டு கிடக்கிறவர்களுக்கு மத்தியில் நீங்க அமைதியா செஞ்சுக்கிட்டு இருக்கிற இந்த பணிகள் பிரமிப்பா இருக்கு.
(ஆமா யாராச்சும்,என் வலைப்பூவை படிப்பாங்கலா.இல்ல நானா புலம்பிக்கிட்டுக்கிடக்கனா?)

அப்புறம் இன்னும் நிறையபேரு,நல்ல விசயங்கள் எழுதுறாங்க.தொடர்ந்து நானும் எழுதலாம் முடிவுபண்ணிட்டேன்.(யாரும் படிச்சாலும்,படிக்காட்டாலும்)

நன்றி.

வீரமணி இளங்கோ

5 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நண்பர் வீரமணி இளங்கோ,
வணக்கம் இவை வந்தாரை வாழவைக்கும் தமிழ் வலைப்பதிவுகள் நிச்சயம் உங்களுக்கும் இடமுண்டு.உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறேன் திசைகளில் கடைசியாக வந்த கவிதை அருமை.பெயர் மாறிவிட்டதென்று பனசை சொன்னார்.
வாங்கோ கலக்குங்கோ

October 28, 2004 at 6:48 AM  

Blogger Chandravathanaa said...

படிப்பவர்களும் ரசிப்பவர்களும் அதை எழுதிச் சொல்வது மிகக் குறைவு.
அதனால் யாரும் படித்ததற்கான அறிகுறி இல்லாவிட்டாலும், சலித்துப் போகாமல்
எழுத வேண்டுமென்று தோன்றுவதையெல்லாம் எழுதிக் கொண்டே இருங்கள்..

நட்புடன்
சந்திரவதனா

October 28, 2004 at 9:28 AM  

Blogger பினாத்தல் சுரேஷ் said...

//அப்புறம் இன்னும் நிறையபேரு,நல்ல விசயங்கள் எழுதுறாங்க.தொடர்ந்து நானும் எழுதலாம் முடிவுபண்ணிட்டேன்.(யாரும் படிச்சாலும்,படிக்காட்டாலும்)//

Athuthaan saarayam (that is the spirit!), vaanga, kalakkunga.

October 28, 2004 at 1:43 PM  

Blogger வீரமணிஇளங்கோ said...

ஈழநாதன்,சந்திரவதனா,சுரேஷ் உங்கள் வரவேற்புக்கு நன்றி..காலேஜ்ல மாதிரி
சீனியரெல்லாம் ராகிங் எதுனா பண்ணுவீங்களா?

October 28, 2004 at 2:56 PM  

Anonymous Anonymous said...

வாங்க வாங்க!. உங்கள் பதிவுகளை படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள் கவிஞரே. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.

அப்புறம் அந்த ராகிங்க் ஐடியா நல்லாயிருக்கு. இனிமேல் செய்யலாமான்னு ஒரு ரோசனை. :)--
நவன் பகவதி

October 28, 2004 at 3:09 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home