புகழ்

பெரும்பாலும்...
உன்னைப் பிரயோகித்த எல்லாநேரங்களிலும்
என் இலக்குகள் தரைமட்டமாய் போயிருக்கின்றன

நான் குறிவைத்தவர்களில்
உன்னை முள்ளாய் எண்ணிமுறித்துப்போட்டவர்கள் சிலர்
உன்னை மலராய் எண்ணி
உன் இன்னொரு தழுவலுக்காய்
தன் அலுவலை மறந்து திரிகிறவர்களே அநேகம் பேர்

நீ புத்திசாலிகளின் ஆயுதம்
முட்டாள்களின் சவக்குழி

அறிந்தவன் உன்னை விலக்கிச் செல்கிறான்
அறியாதவன் உன்னைச் சுமந்துசெல்கிறான்

சுமந்து செல்பவனுக்கு
விழுந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்தானே


வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்
veeramanielango@hotmail.com

2 Comments:

Blogger rajkumar said...

கவிதை நன்றாக இருக்கிறது.

வைகை நதிக்கரையில்- பெயர் காரணம் என்ன?

அன்புடன்

ராஜ்குமார்

October 28, 2004 at 1:53 PM  

Blogger வீரமணிஇளங்கோ said...

நன்றி ராஜ்குமார்..
வைகைநதிக்கரையில் தான் என் கிராமம்(தேனி மாவட்டம்) உள்ளது..

என் கவிதைநூலுக்கான தலைப்பும் கூட

October 28, 2004 at 3:03 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home