கிரகாம் பெல்லுக்கு நன்றி!!!


ஒத்தடம்

வருவாயில் பெரும்பங்கை
நீ வாரிக்கொண்ட போதிலும்
உன்மீது வருத்தமில்லை!

நிழற்படங்களில் தழுவிக்கொள்ள இயலாத
எங்கள் அன்புக்குரியவர்களை
உன் நித்திரையைக் கலைத்துத்தானே
சத்தங்களிலாவது முத்தமிட்டுக்கொள்கிறோம்!

பெற்றோரிருந்தும் அனாதைகளாய்...
மணமுடித்தும் பிரம்மச்சாரிகளாய்...
சுற்றங்களிருந்தும் தனியர்களாய்...
இந்த வெளிநாட்டு மண்ணில்,
எங்கள் வேட்டைக்கார வாழ்க்கை உன்னாலேயே அர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது!

உன் அழுக்கான தேகம்தான்
எங்களில் பலருக்கும்
குழந்தையின் கன்னமாயும்...
மனைவியின் இதழுமாயும்...

உயிரற்ற தொலைபேசியே!
நீ
இதயம் இல்லா சடமாய் இருந்தபோதிலும்

நீ
சுமந்துவரும் ஓசைகளே
வலிக்கின்ற எங்கள் இதயக் காயங்களுக்கு
ஒத்தடங்கள்!


4 Comments:

Blogger ரா.சு said...

அருமையான ஒத்தடம் - ஆழ்ந்த கருத்துக்களுக்கு ஜே!

October 25, 2004 at 7:07 AM  

Blogger வீரமணிஇளங்கோ said...

நன்றி ரா.சு அவர்களே.

October 25, 2004 at 12:19 PM  

Blogger தகடூர் கோபி(Gopi) said...

வாங்க! வாங்க! கவிஞர் வீரமணி இளங்கோ அவர்களே! கவிதைகள் ப்ரமாதம்! கலக்குங்க!

October 27, 2004 at 2:47 PM  

Blogger rajkumar said...

மிகவிம் அடுமையாக இருக்கிறது.

அன்புடன்

ராஜ்குமார்

October 28, 2004 at 1:56 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home